இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் திருமணங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 39 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% குறைவாகும்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காலத்தில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 71,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின் படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 20 761 பிறப்புக்கள் பதிவாகியுள்ளன. இதே நேரம் 2020 ஆம் ஆண்டில் பதிவான பிறப்புக்களுடன் ஒப்படைகையில் குறிப்பிடத்தக்களவு குறைவாகும். 2020 ஆம் ஆண்டு 301706 பிறப்புக்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு சுமார் 4 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான பிறப்புக்கள் குறைவாக பதிவாகியுள்ளன.

