இலங்கைக்கான பங்களாதேஷின் சுற்றுப்பயணத்தின்போது வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட் தயாராகி விடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பாப்வேக்கெதிரான தொடரை தஸ்கின் தவறவிட்டதுடன், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளையும் தவறவிடவுள்ளார்.
இந்நிலையில் அவரது புனர்வாழ்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்தால் போட்டியில் பங்குபற்றுவதற்கான உடற்றகுதியை தஸ்கின் பெற்று விடுவாரெனக் கூறப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு பங்களாதேஷ் வருகிறது.