கனடா, இராணுவ சேவை உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 20 சதவீதம் வரை உயர்த்தும், அத்துடன் அடுத்த 12 மாதங்களில் தொடர்ச்சியான சலுகைகள் மற்றும் போனஸ்கள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் உள்ள விமான படை தளத்தில் இராணுவ உறுப்பினர்களால் சூழப்பட்டபோது கார்னி இதனை தெரிவித்துள்ளார்.
“எங்கள் கனேடிய ஆயுதப் படைகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளது, அவர்களின் வளங்களும் ஊதியமும் வேகத்திற்கு ஏற்ப இல்லை,”
” கனேடியக் கொடியை அணியவும், அதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கவும் நாங்கள் நம்பும் வீரர்களான உங்கள் சம்பளம் – உங்கள் பொறுப்புகளின் எடையை பிரதிபலிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக முக்கியமான ஊதிய உயர்வு இதில் அடங்கும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் இந்தத் திட்டத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கனேடிய இராணுவ செலவினங்களை அதிகரிப்பதற்கும் அதன் நேட்டோ உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கும் கனடா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஊதியம் உயர்த்தப்படும் என கார்னி இந்த வருடத்தின் ஆரம்பத்திலும் கூறியிருந்தார்.