யோங் மற்றும் டன்டாஸ் தாக்குதலில் ஒருவரை காயப்படுத்திய வழக்கில் தேடப்படும் சந்தேக நபர்
தாக்குதல் விசாரணை தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரின் பூகிபபடத்தை வெளியிட்டுள்ள டொரோண்டோ காவல்துறை அவர் பற்றிய தகவல்களையும் வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் 12 அன்று மாலை 5 மணியளவில் யோங் வீதி மற்றும் டன்டாஸ் வீதியின் மேற்கில் நடந்த தாக்குதல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் வாய்த் தகராறில் ஈடுபட்ட நிலையில், அதில் ஒருவர் மற்றவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக,தேடப்பட்டு வந்த நபரின் படத்தை நேற்று சனிக்கிழமை, பொலிஸார் வெளியிட்டனர், அவர் 25 முதல் 35 வயதுடையவர், எனவும் ஐந்து அடி 11 முதல் ஆறு அடி உயரம் கொண்டவர் மற்றும் நடுத்தர உடல் எடை கொண்டவர் என்றும் விவரிக்கப்படுகிறது.
அவர் கடைசியாக வெள்ளை நிற சட்டையும், கருப்பு காற்சட்டையும் மற்றும் கருப்பு காலணிகளும் அணிந்திருந்தார்.
தகவல் தெரிந்தவர்கள் 416-808-5200 என்ற எண்ணில் அல்லது குற்றத் தடுப்பு பிரிவை 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.