12 C
Scarborough

இரசிகர்களின் ஆரவாரத்தில் கண் கலங்கிய மெஸ்ஸி

Must read

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி சொந்த மண்ணில் நடந்த போட்டியில் விளையாடியதை அடுத்து கண்கலங்கிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் நடப்பு சம்பியன் அர்ஜென்டினா, வெனிசுலாவை சந்தித்தது.

இதில் பந்தை அதிக நேரம் வைத்து ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை தோற்கடித்தது.

அர்ஜென்டினா அணியில் கேப்டன் லயனல் மெஸ்சி (39-வது மற்றும் 80-வது நிமிடம்) 2 கோலும், லாட்டாரோ மார்டினெஸ் (76-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.

நடப்பு தகுதி சுற்றில் உள்ளூரில் அர்ஜென்டினா அணிக்கான கடைசி போட்டி இதுவாகும். அத்துடன் 38 வயதான மெஸ்சிக்கு சொந்த மண்ணில் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கருதப்படுவதால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் திரண்டனர்.

சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையாடிய மெஸ்ஸி, ரசிகர்கள் அவர் பெயரை உச்சரித்து ஆரவாரம் செய்தபோது அவர் கண்கலங்கினார்.

அடுத்த உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

23-வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

கண்டங்கள் வாரியாக நடைபெற்று வரும் நிலையில் தென் அமெரிக்க மண்டலா அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

லீக் சுற்று முடிவில் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறுகின்றன.

ஏற்கனவே அர்ஜென்டினா,பிரேசில் ஈகுவடார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article