18.1 C
Scarborough

இரசாயனம் மீட்கப்பட்ட பகுதியில் வெடிபொருட்களும் மீட்பு

Must read

ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 17 தோட்டாக்கள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்கள் என்பனவே மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த வளவு பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு அருகில் புதிதாக வெட்டப்பட்ட வடிகானில் இருந்து இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் இருந்து இரசாயன பொருட்கள் மீட்க்கபப்ட்டதை தொடர்ந்து அங்கு அதிகாரிகளினால் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article