பசுபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோவில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவையும் ஏற்பட்டுள்ளன.
இந்த அனர்த்தம் காரணமாக மெச்சிக்கோவில் இதுவரையில் 28 பேர் வரையில் உயிர் இழந்துள்ளனர்.
மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
குறித்த புயல் நாளை கரையை கடக்கும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

