பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் ‘804’ என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் சபை 4,000 டொலர் அபராதம் விதித்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த இம்ரான் கானின் கைதி இலக்கத்தை குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.