16.5 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 27.06.2025

Must read

மேஷம்

அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும்.அமைதி காக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

பிரபலங்கள் உதவுவார்கள். நீண்டகால கனவு நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

இன்றைய ராசிபலன் – 25.06.2025

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

உணவு விசயத்தில் கவனம் தேவை. மொத்ததில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.

இன்றைய ராசிபலன் – 24.06.2025
அதிர்ஷ்ட நிறம்: கிரே

சிம்மம்

தம்பதிகளுக்கு நினைத்தது பலிக்கும். உத்யோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். ஒரு சிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள்.

இன்றைய ராசிபலன் – 23.06.2025
அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துச் செல்லும். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

பணம் பலவழியில் வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். ரசனைக் கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

குல தெய்வ கோவில்களுக்கு சென்று வருவீர்கள். அரசியலில் உள்ளோர் பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரி செய்வீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article