14.6 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 23.06.2025

Must read

மேஷம்

திருமண விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். நன்கு படிப்பர். சைனஸ், ஆஸ்த்மா போன்ற சளி தொந்தரவுகள் நீங்கும். கணவன்–மனைவி உறவு தித்திக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

ரிசபம்

வீட்டில் அமைதி நிலவும். தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும். தங்கள் நட்பினை புதுப்பிப்பீர்கள். தேகம் பலம் பெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். சிறு வயது நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மிதுனம்

பணப் புழக்கம் சரளமாகும். தம்பதிகளிடையே காதல் குறையாது. உணவு விசயத்தில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். வியாபாரம் சிறப்பாக காணப்படும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முயற்சிகள் பலிதமாகும். உடல் நலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

வீட்டில் சுப விசேஷ காரியங்களில் சுறுசுறுப்புடன் வேலை பார்ப்பீர்கள். வேலையில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். அலுவலகத்தில் புதிய நபர்களின் வருகை இருக்கும். அவர்களிடம் கவனமாக பழகவும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

சிம்மம்

உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர்கள் வெளியூருக்குச் சென்று அங்கு பெரிய ஆர்டர்களை பெறுவர். ஏற்றம் காண்பர். வியாபாரத்தில் கொடுக்கல்–வாங்கல் சீராகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும், மாணவர்களின் முயற்சி வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கன்னி

சின்னத் திரை மற்றும் பெரிய திரை என்று சொல்லும் கலைஞர்களுக்கு வெற்றி குவியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்–மனைவி உறவு இனிக்கும். உடல் நலம் தேறும். சுப காரியங்கள் கூடி வரும். காய், பழ வியாபாரிகளுக்கு நேற்றைய விட இன்று லாபம் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் லாபத்தை எதிர்ப்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

துலாம்

சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

விருச்சிகம்

திருமணக் காரியங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். கூட்டு வியாபாரிகளுக்கு தங்களின் கூட்டுத்தொழிலில் ஏற்றம் உண்டாகும். எதிரிகள் விலகி ஓடுவார்கள். நண்பர்களின் நிலை உயரும். அவர்கள் தங்களுக்கு தக்கச் சமயத்தில் உதவுவர். உத்தியோகத்தில் வெளியூருக்கு மாற்றலாவர்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

தனுசு

மார்கெட்டிங் பிரிவினர் தங்கள் அலுவலகத்தில் உத்யோக உயர்வு கிட்டும். பண நடமாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வழக்குகளில் சாதகமானப் போக்கு தென்படும். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களில் முன்னேற்றம் காண்பர். உடலில் இருந்த கை, கால் வலி நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

மகரம்

திருமணமானதிலிந்து பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். பிள்ளைகளுக்கு நல்ல ஞாபகத் திறன் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் எதிர்பார்த்த காரியம் வெற்றியைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கும்பம்

அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். காதலர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. புதிய ஆடை, அணிமணிகளை தள்ளுபடி விலையில் வாங்குவீர்கள். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும். அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் கிரே

மீனம்

வியாபாரிகளுக்கு விற்பனை கூடி நல்ல லாபம் கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகள் குவிப்பர். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு அலுவலக சம்பந்தமாக வெளியூர் பயணம் நேரிடும். தம்பதிகளிடையே அன்புப் பலப்படும். உடல் நலத்தில் கால் பாதங்களில் வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article