மேஷம்
நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். நீங்கள் எடுத்த முடிவுகள் அனைவரையும் கவரும்.இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியடையும்.
வேலைப்பகுதியில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
ரிஷபம்
குழந்தைகளின் சாதனை உங்களை மகிழ்விக்கும். புதிய வருமான வாய்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சந்தையில் உங்களின் பெயர் உயர்வடைய நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள்.இன்று உங்கள் உழைப்புக்கு மதிப்பு கிடைக்கும்.
கடன் சுமை குறையும் வாய்ப்பு அதிகம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மிதுனம்
வேலையில் தங்கள் வேலை பளு குறையும். வியாபாரத்தில் தங்கள் புதிய திட்டங்களில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். வெற்றிக்கான பாதை தெளிவாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கடகம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
சிலருடன் ஏற்பட்ட மன வேறுபாடு நீங்கும்.இன்று எதிர்பாராத சந்திப்புகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிதாக வாங்கும் பொருட்கள் பயனளிக்கும். பயணத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம். மன அமைதி அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
புதிய பொறுப்புகள் உங்களை ஊக்குவிக்கும். பொருளாதார லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். சிறிய பயண வாய்ப்பு இருக்கலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சிறந்த முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்கள் சாதனைகள் படைப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத் தலைவிகளின் செயல்கள் அனைவராலும் பாராட்டப்படும்.மன அமைதி நிலவும். பயணத்தில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களது புதிய யோசனைகள் வெற்றி தரும். முக்கிய சந்திப்புகள் நடக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும்.இன்று நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேகம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு
நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். வீட்டில் புதிய பொருட்கள் சேர்க்கப்படும். மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்கள் பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களின் உதவி உங்களுக்கு துணை நிற்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணத்தில் சந்தோஷம் அதிகம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மகரம்
புதிய நண்பர்கள் கிடைக்கும். அலுவலகத்தில் தங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
கும்பம்
இன்று உங்கள் பேச்சு மற்றவர்களை சுவரும். அலுவலகத்தில் வேலைப்பகுதியில் முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரத்தில் சிறிய முதலீடுகள் லாபம் தரும். தம்பதிகளின் புதிய திட்டங்கள் நிறைவேறுமம். மன உற்சாகம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு உண்டு. பொருளாதார ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு சாதகமான நாள். பயணத்தில் மகிழ்ச்சி உண்டு. உடல் நலத்தில் சுவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு