21.2 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 09.07.2025

Must read

மேஷம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகரிக்கும். தம்பதிகள் வெளியூர் பயணம் செல்வர். மார்க்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்களை பெறுவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்த்ததற்கு மேல் லாபங்கள் கிடைக்கும். உடல்நலம் சீராகும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்
ரோகினி நட்சத்திரகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். வாக்குவாதமும் செய்ய வேண்டாம். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் பொறுமை அவசியம்.

அதிர்ஷட நிறம்: சிவப்பு

மிதுனம்
நீண்ட காலமாக இருந்து வந்த குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு தங்கள் இலக்கை எட்ட சற்று சிரமம் ஏற்படும். இறைச்சி வியாபாரம் மற்றும் மளிகை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாங்கிய கடனில் ஒரு பகுதி அடைத்து விடுவீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டு உணவினை உட்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்
பெண்களுக்கு என்று தாங்கள் நீண்ட நாட்களாக நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். தள்ளு வண்டியில் விற்கும் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வழக்கறிஞர்கள் வெற்றி காண்பார். உடல்நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்
புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் நல்ல ஒரு தொகையை காண்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு கூடும். உறவினர்கள் வந்து போவார். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். உடல் நலம் மேன்மை அடையும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி
பெரியவர்களின் உடல் நலனை கவனித்துக் கொள்வது நல்லது. மருத்துவ செலவு உண்டு. பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய வீட்டை சீர்செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். லாபத்தை அதிகரிப்பர். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்
உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பெண்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்டுவது அவசியம். உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்
வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடு தோன்றும். விட்டுக் கொடுப்பது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். பணப் புழக்கம் மிகும்.

அதிர்ஷட நிறம்: நீலம்

தனுசு
புதியவர்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வாக்குத் தொழிலான ஜோதிடம் வழக்குகள் பார்ப்பவர்கள் மற்றும் கவுன்சிலிங் கொடுப்பவர்களுக்கு தேவை அதிகரிக்கும். வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பு லாபத்தை அள்ளும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்
ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் லாபத்தை அதிகரிப்பர். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். வழக்குகள் வெற்றியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்
தேகம் பளிச்சிடும். பல் வலி, மூட்டு வலி வந்துபோகும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்
தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். உறவினர்கள் வருகை உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். காதல் பொறுமையை தரும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article