மேஷம்
கணவன்-மனைவி உறவுகளில் இனிமை பெருகும். அரசு சார்ந்த உதவிகள் பெறலாம். வருமானம் சிறிது சீராகும். பயணங்களில் சிறிய தாமதம் ஏற்படும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். நல்ல யோசனைகள் செயலாக்கப்படும். புதிய வாய்ப்புகள் திறக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
வியாபாரம் சிறப்பாக செல்லும். பெண்களுக்கு வேலையில் நெருக்கடி ஏற்படும்.திட்டமிட்ட வேலைகளை முடிக்க சற்று சிரமம் உண்டாகும் மாணவ மாணவிகள் கவனச்சிதறலை தவிர்க்க வேண்டும். உணவு நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடங்களில் உட்கொள்வதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
தங்கள் துணை மீது நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் நீண்ட நேரம் மொபைல் தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகள் வலுப்படும். பெண்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். காலில் வலி ஏற்படலாம். பிசியோதரபி சிகிச்சை மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தலைவிகள் தங்கள் ஓய்வுக்கான நேரத்தை ஒதுக்கவும். மாணவ மாணவிகளுக்கு பொறுமையுடன் ஆசிரியர் வழிகாட்டுவார். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் காண வேண்டுமானால் புதிய யுத்திகள் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உழைப்பிற்கு நல்ல பலன் உண்டு.அரசியல் முன்னேற்றத்திற்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதிக உழைப்பும் அதற்கு தகுந்த பலன்களும் தரும். பணியில் பதவி உயர்வு ஏற்படும். இளைஞர்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
குடும்பத்தில் காரியங்கள் நடந்தேறும். பெண்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உண்டாகும்.பெற்றோருக்கு மனச்சுமை குறையும். கடன்கள் கட்டுப்படும். வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு. புதிய உறவுகள் வளர்ந்திடும். அவர்களால் நன்மை கிடைக்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
குடும்பத் தலைவிகள் சாமர்த்தியத்தால் பிரச்சனைகள் சமாளிக்கப் பெறுவர். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உண்டாகும். வாகனத்தில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு வயிறு பிரச்சனை ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் பழைய நண்பர் உதவுவார்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு
உத்யோகஸ்தர்களுக்கு பணியிலே மேம்பாடு ஏற்படும். புத்திசாலித்தனமான முடிவுகள் தேவை. குடும்பத்தில் மதிப்பும், ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வங்கி கடன் பெறல் சாத்தியம். தற்காப்பு சிந்தனைகள் வளரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
இன்று பண வரவு அதிகரிக்கும். வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனவலிமை பெருகும். எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். சில எதிர்ப்பு கருத்துகள் வரும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். தெய்வீக அனுபவங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
மனதளவில் நிம்மதி நிலவும். விருப்பமான பலன்கள் கிட்டும். பழைய முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் சமாளிக்க முடியும். வேலை வாய்ப்பு பெறுவீர்கள். பெண்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
இன்று சில திடீர் செலவுகள் வரலாம். இருந்தாலும் பண வரவு தொடரும். குடும்பத்தில் உள்ள ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு தாண்டி சாதனை செய்யும் நாளாக அமையும். பயணங்கள் பயனளிக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நம்பிக்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்