7.8 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 05.10.2025

Must read

மேஷம்

மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். பணப் புழக்கம் மிகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

ரிஷபம்

பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி உறவினர்கள் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. சாதகம் மிகுந்த நாள்.

அதிர்ஷட நிறம் மஞ்சள்

மிதுனம்

சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். திருமணம் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கடகம்

விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெ பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதி. பணவரவுக்கு பஞ்சமில்லை.கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும்.

அதிர்ஷட நிறம் கருஞ்சிவப்பு

சிம்மம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

கன்னி

பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீ வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வர். வியாபாரம் சாதகமாக இருக்கும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள்.

அதிர்ஷட நிறம் ஊதா

துலாம்

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியம் தேறும். கலைஞர்களுக்கு அரசியலிலிருந்து அழைப்பு வரும். கல்வித் தடை நீங்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும்.

அதிர்ஷட நிறம் சாம்பல்

விருச்சிகம்

வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்குகள் வெற்றி பெற்று தங்கள் புகழ் ஓங்கும். உறவினருடன் விடுமுறையைக் கழித்து திரும்புவர். யாருக்கும் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கு மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும்.தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷட நிறம் மஞ்சள்

தனுசு

கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தோல்வி பயம் நீங்கும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

கும்பம்

வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம் வான்நீலம்

மீனம்

சோர்வும் களைப்பும் நீங்கும் நாள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. விட்டுப் போன நட்பை தொடர்வீர்கள். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்.

அதிர்ஷ்ட நிறம் பொன்நிறம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article