கனடாவில் மொண்ட்ரியல் நகரில் நடைபெறும் வருடாந்த கனடா தின பேரணி இந்த வருடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்படுகிற திட்டமிடல் குழப்பங்கள் மற்றும் நகர சபை ஊழியர் வேலைநிறுத்தங்கள்” தான் இவ்வாண்டு நிகழ்வு ரத்து செய்யப்பட முக்கிய காரணங்கள் என பேரணியின் பிரதான ஏற்பாட்டாளர் நிக்கோலஸ் கவென் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு சிக்கல்கள் நகர சபை ஊழியர்களின் உறவுகளில் ஏற்படும் விரிசல் என்பவையும் இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டும் இதே பேரணி ரத்து செய்யப்பட்டிருந்தது. 1977இல் தொடங்கிய இந்த பேரணி, வருடந்தோறும் 1லட்சம் வரையான பார்வையாளர்களை கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பேரணியைத் திட்டமிடுவதில் கடந்த சில ஆண்டுகளில் பல தடைகள், குழப்பங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.