அமெரிக்காவின் பெற்றோல் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தெலுங்கானா ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் பொலெ என்ற (27 வயது) இளைஞர் 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல் மருத்துவ கற்கையை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதனிடையே அவர் பகுதி நேரமாக டெக்ஸாஸில் டெல்லஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
நிலையில் நேற்று இரவு அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பித்துள்ளார். இந்த தாக்குதல் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனிடையே உயிரிழந்த மாணவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

