இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்நிலையில், லீட்சில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்த்துவிட்டதாக மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 18 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டை கண்டு களிக்கும் வகையிலான இந்த மைதானத்தில் நேற்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
ஆட்டத்தின் 2வது நாளான இன்றும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. நாளை 3ம் நாள் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. 4ம் நாள் (திங்கட்கிழமை) ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளில் இதுவரை 13 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படுள்ளன என மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.