16.1 C
Scarborough

இந்தியா, சீனாவை வரிகள் மூலம் பணிய​ வைக்க முடியாது: புடின் தெரிவிப்பு

Must read

வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார்.

சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற எஸ்​சிஓ மாநாடு மற்​றும் ராணுவ பேரணி​யில் பங்​கேற்​றதற்​குப் பிறகு முதல்​முறை​யாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த போதே புடின் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்​பின் நிர்​வாகம் பொருளா​தார அழுத்​தங்​களை பயன்​படுத்தி ஆசி​யா​வின் இரு பெரும் பொருளா​தா​ரங்​களை பணி​ய​வைக்​கும் வேலை​யில் ஈடு​படு​கிறது.

காலனித்​துவ சகாப்​தம் இப்​போது முடிந்​து​விட்​டது. வரி​ அதி​கரிப்​பு, வர்த்தக தடைமூலம் ஆசி​யா​வில் வலிமை வாய்ந்த பொருளா​தா​ரங்​களைக் கொண்ட நாடு​களான சீனா மற்​றும் இந்​தி​யாவை பணி​ய​வைக்க முடியாது.

அதிக வரி​களை விதிப்​ப​தன் மூலம் இந்த நாடு​களின் தலை​மையை பலவீன​மாக்​கும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு​வருக்​கும் சொந்த உள்​நாட்டு அரசி​யல் வழி​முறை​கள் மற்​றும் சட்​டங்​கள் உள்​ளன.

நீங்​கள் இவ்​வாறு நடந்து கொள்​ளும்​போது அந்த பெரிய நாடு​களின் தலைமை எவ்​வாறு எதிர்​வினை​யாற்ற முடி​யும். இதனை அமெரிக்கா சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும். விரை​வில் பிரச்​சினை​கள் சரிசெய்​யப்​பட்டு அரசி​யல் ரீதி​யான பேச்​சு​வார்த்தை சகஜ நிலைக்கு திரும்​பும் என்ற நம்​பிக்கை உள்​ளது என புடின் தெரி​வித்​தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article