2.5 C
Scarborough

இந்தியா உலகக் கோப்பையை வெல்லாது: முகமது ஆமிர் சொல்கிறார்!

Must read

டி20 உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் இந்தியா ஒட்டுமொத்தமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. உலகக் கோப்பையை வெல்லாது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகமது ஆமிர் கூறியதாவது:-

முற்றிலும் கிரிக்கெட் பார்வையில் இருந்து நான் ஆராய்ந்ததில், ஒட்டுமொத்தமாக இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. நான் இன்னும் உங்களுக்கு சொல்கிறேன். ஜஸ்ட் அவர்களுடைய பீல்டிங்கை பாருங்கள். மூன்று முதல் நான்கு கேட்ச்கள் மிஸ் செய்கிறார்கள். பீல்டிங்கில் திணறுகிறார்கள். பும்ராவை தவிர மற்ற பந்து வீச்சாளர்களின் பந்து அடி விழுகிறது. ஒரு பவுலர் பலத்துடன் இந்தியா விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று அல்ல. அவர்கள் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்லவும் மாட்டார்கள்.

இவ்வாறு முகமது ஆமிர் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article