15.4 C
Scarborough

இந்தியாவின் புறக்கணிப்புக்கு பாகிஸ்தான் பதிலடி!

Must read

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு லாகூரில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஏழு நாட்டு அணிகளின் கொடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது, இந்திய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படவில்லை என்று ஒரு ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டுளு்ளது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு ஐசிசி நிகழ்வை நடத்தும் முதல் முறையாக இந்தப் போட்டி நிகழ்வாகும், பாகிஸ்தான் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில், சம்பியன்ஸ் கிண்ண போட்டியை பாகிஸ்தான் நடத்துவது அந்நாட்டிற்கும் அதன் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு ‘முக்கியமான சந்தர்ப்பம்’ என்றார்.

“29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் 2025 பாகிஸ்தானுக்குத் திரும்பும்,” என்று நக்வி நிகழ்வின் போது குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் நியூசிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேசத்துடன் குழுவாகவும், மறுபுறத்தில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article