இங்கிலாந்து, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியானது நொட்டிங்ஹாமில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் மலையும் மடுவும் போல இங்கிலாந்தும் சிம்பாப்வேயும் காணப்படுகின்ற நிலையில் சிம்பாப்வேயின் சிரேஷ்ட வீரர்களான கிறேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், சிகண்டர் ராசா பெரிய இனிங்ஸ்களை ஆடினால் பிளஸிங்க் முஸர்பனி, விக்டர் நயுச்சி, றிச்சர்ட் நகரவாவை உள்ளடக்கிய சிம்பாப்வேயின் வேகப்பந்துவீச்சுக் கூட்டணி இங்கிலாந்துக்கு சவாலையளிக்கலாம்.
மறுபக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் ஸக் குறோலி, ஒலி போப் ஆகியோர் ஓட்டங்களுக்குத் தடுமாறுகையில் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பங்களிலொன்றாக இப்போட்டி நோக்கப்படுகிறது.
இது தவிர கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் குஸ் அட்கின்ஸன் தலைமையில் அணிக்கு மீளத் திரும்பியுள்ள ஜொஷ் டொங்க் மற்றும் அறிமுக வீரர் சாம் குக் ஆகியோருடனே இங்கிலாந்து களமிறங்குகிறது.