இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 126 கி.மீ. வேகத்தில் வீசிய ஒரு பந்து ஜெய்ஸ்வால் பேட்டில் பட்டதில் அந்த பேட் உடைந்துள்ளது.
இங்கிலாந்து – இந்தியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மேன்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுளளது.
பேட் உடைந்த நிலையில் மாற்று பேட் கொண்டு வரப்பட்டு ஜெய்ஸ்வால் தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.