12.7 C
Scarborough

இங்கிலாந்து அணித்தலைவராக அறிவிக்கப்பட்ட இளம் வீரர் ஜேக்கப்

Must read

அடுத்தமாதம் இடம்பெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் தலைவராக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

21 வயது சகல துறை ஆட்டக்காரராக ஜேக்கப் பெத்தேல் அனைத்து வகையிலும் இங்கிலாந்து அணியின் இளைய தலைவர் ஆகியுள்ளார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

எனினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடப்படவிருக்கும் ஒருநாள், டி20 தொடருக்கு ஹாரி புரூக் கேப்டனாகத் திரும்புவார் என கூறப்படுகிறது.

ஜேக்கப் பெத்தேல் பாஸ்பால் காலக்கட்டத்தில் கடந்த ஆண்டுதான் இங்கிலாந்துக்காக அறிமுகமானார். இவருக்கு முன்பாக இளம் கேப்டனாக உயர்த்தப்பட்டவர் 1889-ம் ஆண்டு மாண்ட்டி பௌடன் என்பவருக்கு அப்போது வயது 23. இதனையடுத்து இப்போது ஜேக்கப் பெத்தேல் 21 வயதில் கேப்டனாகியுள்ளார்.

இப்போது ஜேக்கப் பெத்தேல் ஜாம்பவான் ஜாஸ் பட்லர் உள்ளிட்டோரை வழிநடத்தவுள்ளார். ஜேக்கப் கிரகாம் பெத்தேல் என்ற இயற்பெயர் கொண்ட பெத்தேல் அக்டோபர் 23, 2003-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் உள்ள பார்படோஸில் பிறந்தார். இவர் இடது கை பேட்டிங்கும், இடது கை ஸ்பின் பவுலிங்கும் வீசுபவர்.

20 வயதில் இங்கிலாந்துக்காக தன் 2-வது போட்டியிலேயே ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவை ஒரே ஓவரில் 20 ஓட்டங்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் தன் வரவை அறிவித்தார். 47 பந்துகளில் 90 ஓட்டங்களை பெற்று அந்தப் போட்டியை இவரும் லியாம் லிவிங்ஸ்டனும் வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

அதன் பிறகு கரீபியன் தொடரில் 3 அரைசதங்கள் என்று சீரான முறையில் தன் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். பெத்தேல் உண்மையில் தான் பிறந்த மேற்கிந்திய தீவுகளுக்குத்தான் ஆட வேண்டியவர்.

ஆனால் 13 வயதில் ரக்பி பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைக்க, இங்கிலாந்துக்கு அவர் குடிபெயர்ந்தார். அதிலிருந்து அவர் திரும்பிப் பார்க்கவில்லை. இன்று இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரராக எழுச்சி பெற்று இப்போது அணித்தலைவராக உயர்வு பெற்றுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article