சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழுநிலைச் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேறியமையையடுத்து ஜொஸ் பட்லர் பதவி விலகியிருந்தார்.
கடந்தாண்டு இங்கிலாந்தின் உப அணித்தலைவராக 26 வயதான ப்றூக்கே கடமையாற்றியதோடு, அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் பட்லர் இல்லாத நிலையில் அணித்தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.