அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘ஆர்யன்’ படம் உருவாகியுள்ளது.
இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியாகிறது.
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கொல்லாதே கொள்ளை அழகாலே பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
அழகியலே என பெயரிடப்பட்டுள்ள இப் பாடலை ஜிப்ரான் அபி மற்றும் பிரிட்டா ஆகியோர் பாடியுள்ளனர்.

