கனடா தினத்தன்று ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு கடையில் இருந்து தொலைபேசிகளைத் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் யோங் தெரு மற்றும் கார்வில் வீதிக்கு அருகிலுள்ள ஹில்க்ரெஸ்ட் மாலில் களவு இடம்பெற்றதாக தெரிவிக்கும் அழைப்பு வந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயுதம் ஏந்திய இரண்டு சந்தேக நபர், செல்போன் கடைக்குள் நுழைந்து தொலைபேசிகளை எடுத்துச் கொண்டு வாகனமொன்றில் தப்பி சென்றுள்ளனர்.
கொள்ளை இடம்பெற்ற நேரத்தில் கடையில் இரண்டு ஊழியர்கள் இருந்தபோதும், யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அதிகாரிகள் தப்பியோடிய வாகனத்தைக் கண்டுபிடித்து அங்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு திருடப்பட்ட தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் டொராண்டோவைச் சேர்ந்த 22 வயதான அடுன் டென்சாவ் மற்றும் பிராம்ப்டனைச் சேர்ந்த 30 வயதான ரஷான் டேரன்ஸ் பென்னட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கொள்ளை, மாறுவேடம் தரித்தல் மற்றும் மோசமான வகையில் பெற்ற $5,000 க்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.
தப்பிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், இன்னும் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.