அவுஸ்திரேலியா – இலங்கை இடையேயான 2- ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 257 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அவுஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ஓட்டங்களை குவித்தது.
156 ஓட்டங்களை குவித்ததன் மூலம் ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்சு கேரி முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு இலங்கை – பங்காளாதேசத்துக்கு எதிராக கில்கிறிஸ்ற் 144 ஓட்டங்களை எடுத்திருந்ததே அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது அலெக்சு கேரி முறியடித்துள்ளார்.