19.4 C
Scarborough

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சாகசம்

Must read

மாமல்​லபுரத்​தில் நடை​பெற்று வரும் ஆசிய சர்ஃபிங் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சிறு​வர்​களுக்​கான பிரி​வில் பலர் பங்​கேற்று அலைசறுக்கு விளை​யாட்​டில் ஈடு​பட்டு சாகசம் செய்​தனர். ஆசிய சர்ஃபிங் சாம்​பியன்​ஷிப் 2025 போட்டி மாமல்​லபுரம் கடற்​கரை​யில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இதில், தாய்​லாந்​து, பங்​களாதேஷ், சீனா, இந்​தோ​னேசி​யா, இந்​தி​யா, பிலிப்​பைன்​ஸ், மியான்​மர், கொரி​யா, மலேசி​யா, சிங்​கப்​பூர், திபெத், இலங்​கை, குவைத், உஸ்​பெக்​கிஸ்​தான் உள்​ளிட்ட 19 ஆசிய நாடு​களைச் சேர்ந்த 102 விளை​யாட்டு வீரர்​கள் பங்கேற்றுள்ளனர்.

இந்​திய சர்ஃபிங் கூட்​டமைப்​பு, ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்​பு, தமிழக விளை​யாட்டு துறை அமைச்​சகம் இணைந்து ஏற்​பாடு செய்துள்ள இந்த போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்​கியது. ஆக.12-ம் தேதி வரை மாமல்​லபுரம் கடற்​கரை​யில் தின​மும் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், 18 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர்​களுக்​கான போட்டி நேற்று நடை​பெற்​றது. இதில், சிங்​கப்​பூர், தாய்​லாந்​து, இந்​தியா உட்பட பல்​வேறு வெளி​நாடு​களை சேர்ந்த சிறு​வர்​கள் பங்​கேற்று அலைசறுக்கு போட்​டியில் ஈடுபட்டனர்.மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் அலைசறுக்கு போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article