31-வது ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்து வருகிறது.16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை நேற்று சந்தித்தது.
இந்திய அணி 59-84 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபியாவிடம் போராடி தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.
இந்த பிரிவில் முதலிடத்தை பிடித்த சீனா அணி கால்இறுதிக்கு முன்னேறியது. அடுத்த இரு இடங்களை பிடித்த ஜோர்டான், சவுதி அரேபியா அணிகள் கால்இறுதிக்கான தகுதி சுற்றில் மற்ற பிரிவில் உள்ள அணியுடன் மோதும்.