2025 ஆம் ஆண்டுக்கான 19 ஆசிய கிண்ண போட்டிகளுக்கான தொடக்க நேரம் திருத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை சனிக்கிழமை அறிவித்தது.
குறித்த போட்டி தொடரில் 19 போட்டிகளும் இலங்கை நேரப்படி மாலை 7:30 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 6 மணி) தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், 18 போட்டிகளுக்கான தொடக்க நேரம் இப்போது அரை மணி நேரம் தள்ளி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணி) மாற்றப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 15 ஆம் திகதி அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் போட்டி ஒரு பகல் நேரப் போட்டியாக இடம்பெறவுள்ளது, இது இலங்கை நேரப்படி மாலை 5:30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி) தொடங்கும்.
ஆசிய கிண்ண தொடர் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்குகிறது, அபுதாபியில் இடம்பெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங்கை எதிர்கொள்கிறது.