2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய உதைபந்து சம்மேளனத்தின் ஆசியக் கிண்ண தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன வெளியிடப்பட்டுள்ளன.
மூன்றாம் சுற்றுக்கான தகுதிகாண் போட்டிகளில் மொத்தம் 24 அணிகள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவிருக்கின்றது. இதில் இலங்கை குழு டி இல் தாய்லாந்து, துர்க்மேனிஸ்தான் மற்றும் சீனா தாய்பேய் ஆகிய நாடுகளுடன் இடம்பெற்றுள்ளது.
மூன்றாம் சுற்றுக்கான போட்டிகள் இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகுவதோடு இலங்கை தமது முதல் போட்டியில் தாய்லாந்தினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றது.
இலங்கையின் போட்டி அட்டவணை
மார்ச் 25, 2025 – தாய்லாந்து (எதிரணி மைதானம்)
ஜூன் 10, 2025 – சீனா தாய்பேய் (சொந்த மைதானம்)
ஒக்டோபர் 09, 2025 – துர்க்மெனிஸ்தான் (சொந்த மைதானம்)
ஒக்டோபர் 14, 2025 – துர்க்மெனிஸ்தான் (எதிரணி மைதானம்)
நவம்பர் 18, 2025 – தாய்லாந்து (சொந்த மைதானம்)
மார்ச் 31, 2026 – சீனா தாய்பேய் (எதிரணி மைதானம்)