அவுஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழக்க செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள சபீனா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று (ஜூலை 13) தொடங்கியது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இதில் நாணயம் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அந்த அணிக்காக உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கான்ஸ்டோஸ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
சாம் கான்ஸ்டோஸ், 52 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 92 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்த கவாஜாவும் ஆட்டமிழந்தார். பின்னர் கேமரூன் கிரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து 61 ஓட்டங்கள்எடுத்தனர். கிரீன் 46 ஓட்டத்துடனும் , ஸ்மித் 48 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சீரான இடைவெளியில் அவுஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். வெப்ஸ்டர் 1, டிராவிஸ் ஹெட் 20, அலெக்ஸ் கேரி 21, ஸ்டார்க் 0, கம்மின்ஸ் 24, ஹேசில்வுட் 4 ரன்களில் அவுட் ஆகினர். அவுஸ்திரேலிய 70.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்கள் எடுத்துது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்தார். ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியது.
அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கெவ்லான் ஆண்டர்சன் 3 ஓட்டங்களில் ஸ்டார்க் பந்தில் போல்ட் ஆனார். பிராண்டன் கிங் 8, கேப்டன் சேஸ் 3 ஓட்டத்துடன் களத்தில் உள்ளனர்.