இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 145-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 7-ந் திகதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதில் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வெல்பவர் ரூ.43% கோடியை பரிசாக அள்ளலாம். மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை விட இந்த தொகை அதிகமாகும்.
இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், மெட்விடேவ், அரினா சபலென்கா, ஜெசிகா பெகுலா. எம்மா ரடுகானு, ஆஸ்டாபென்கோ உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடுகிறார்கள்.