அமெரிக்காவின் விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமான சேவைகளும் உடனடியாக தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் துணை நிறுவனமான ஹரிசன் ஏர் விமானங்களும் உடனடியாக தரையிறங்கியுள்ளன. இதனால் சுமார் 40 விமான சேவை ரத்து செய்யப்பட்டதோடு 240 க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளன.

