நவம்பர் முதலாம் திகதி முதல் சீன பொருட்களுக்கு மேலதிகமாக 100% வரி விதிக்கப்படும் என்று நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
தமது அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து ட்ரம்ப் இவ்வாறு வரியை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வர்த்தக அமைச்சு கூறியுள்ளதாவது, அதிக வரி விதிப்பு போன்ற அச்சுறுத்தல்கள் சீனாவுடன் இனைந்து செயல்பட சரியான வழி அல்ல.
வர்த்தக போரில் எங்கள் நிலைப்பாடு நிலையானது நாம் வர்த்தக போரை விரும்பவில்லை. ஆனால் அதை பார்த்து பயப்படவும் இல்லை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அந்நாட்டில் இரட்டை தர நிலைக்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டாகும்.
இந்த நடவடிக்கைகள் இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தைக்கான சூழலை கடுமையாக பாதித்துள்ளது.
கடந்த மாதம் முதல் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது தவறான நடைமுறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

