ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்து. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஜிம்பாப்வே 125 ஓட்டத்தில் உள்ளது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ஓட்டங்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது ஜிம்பாப்வே அணியை விட 476 ஓட்டங்கள் அதிகமாகும். ஹென்றி நிகோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கான்வே 153 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 476 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 28.1 ஓவர்களில் 117 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.