நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி ஜூலை 14-ம் திகதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
அமெரிக்காவில் ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 62 போட்டிகள். இதன் இறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் முன்னேறின. அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு வெள்ளோட்டமாக இந்த தொடர் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டது.
இந்த சீசன் முழுவதும் பிஎஸ்ஜி கிளப் அணி இதுவரை ஆறு பட்டங்களை வென்றுள்ளது. இதில் சம்பியன் லீக் பட்டத்தை அந்த அணி முதல் முறையாக வென்று அசத்தியது. பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே பயிற்சியின் கீழ் அந்த அணி ஏழாவது பட்டத்தை இந்த சீசனில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம் புதிய அத்தியாயத்தை தொடங்கும் நோக்கில் செல்சீ இந்தப் போட்டியில் விளையாடுகிறது. நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ள நிலையியல் இந்த அணியின் வெற்றிக்கு அது வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.