அஜாக்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டவுன்டன் வீதியின் கிழக்கே மற்றும் சலீம் வீதியின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு 11 மணிக்குப் பிறகு ஆயுதமேந்திய ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலுக்கமைய அங்கு விரைந்துள்ளனர்.
அதிகாரிகள் வந்தபோது, வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டனர்.
அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் வீட்டிலிருந்து பலரை வெளியேற்றியுள்ளனர்.
எனினும் வீட்டிற்குள் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
தீ விபத்தின் விளைவாக வீட்டின் கூரை இடிந்து விழுந்ததை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன.
தீ விபத்துக்கான காரணம், தோற்றம் மற்றும் சூழ்நிலைகள் தெரியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.