சீனாவின் சூஹாய் (Zhuhai) நகரில் கடந்த நவவம்பர் மாதம் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி 35 பேர் உயிரிழப்பு காரணமான சீனருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பான் வெய்சியு (Fan Weiqiu) எனும் நபர் விவாகரத்து விவகாரத்தால் கோபத்தில் இருந்தார். அப்போது கோபத்தை வெளிப்படுத்த அவர் மக்கள் அதிகம் இருந்த இடத்தில் காரைச் செலுத்தினார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் உயிரிழந்தவர்கள் விளையாட்டு நிலையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்தகொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஃபான் ஒப்புக்கொண்டார். ஃபான் (Fan Weiqiu) புரிந்த குற்றம் கொடூரமான ஒன்று என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.