சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது.
இதனால் உடனே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில் ‘வாடிவாசல்’ படத்திற்கான இசைபணியை தொடங்கிவிட்டதாக ‘கிங்ஸ்டன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி. பிரகாஷ் கூறியிருந்தார். ‘விடுதலை 2’ திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என முன்பே இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.
அப்படத்திற்கான பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன், சூர்யாவுடனான புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.