ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா கடற்கரையில் சனிக்கிழமை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரஷ்ய நகரமான கம்சட்கா பிராந்தியத்தின் நிர்வாக மையமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு கிழக்கே 111 கிலோமீட்டர் (69 மைல்) தொலைவில் 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த கணக்கெடுப்பு 7.5 ரிக்டர் அளவைக் காட்டியதோடு, பின்னர் 7.4 ஆக தரமிறக்கியது.
இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள சில ரஷ்ய கடற்கரைகளில் ஒரு மீட்டர் (3.3 அடி) வரை “ஆபத்தான” அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான், ஹவாய் மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஏனைய தீவுகளில் உள்ள கடலில் 30 சென்டிமீட்டருக்கும் குறைவான அலைகளை காண முடியும் என மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில், இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று கம்சட்கா தீபகற்பத்தைத் தாக்கியது, இது பசிபிக் முழுவதும் நான்கு மீட்டர் உயரம் வரை சுனாமியைத் தூண்டியதோடு ஹவாயிலிருந்த மக்கள் ஜப்பானுக்கு வெளியேறும் நிலையை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு ஜப்பானில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 15,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.