யோர்க்கின் வடக்கு பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியம் வடக்கு யோர்க்கின் பாதர்ஸ்ட் மேனர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலுக்குப் பிறகு, மாலை 5:30 மணிக்குப் பிறகு, டஃபெரின் தெருவின் கிழக்கே உள்ள வில்மிங்டன் அவென்யூ மற்றும் ஓவர்புரூக் பிளேஸ் பகுதிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
குழந்தைக்கு கடுமையான, உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.