யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சகல சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மனு விசாரணையின் போது,யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆராயப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் குழாம், யாழ்ப்பாண மாநகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இந்த நடவடைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும் இந்தச் சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரி, தொடர்புடைய வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.