உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் – அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று சனிக்கிழமை (11) நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தயார்நிலையில் உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதாகவும் இரு நாட்டு முக்கியஸ்தர்களும் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய ஆறு வார காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

