மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், டிமித்ரோவ் உடன் மோதுகிறார்.
இதேபோல் மற்றொரு போட்டியில் ஃப்ரிட்ஸ் மற்றும் பெரெட்னி மோதிய போட்டியில் ஃப்ரிட்ஸ் 7-5, 6-7 மற்றும் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் ஃப்ரிட்ஸ் மென்சிக்-ஐ எதிர்கொள்கிறார்.
அரையிறுதி சுற்று நடைபெற உள்ள நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.