மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாக தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாம் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்.
இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கியேனும் நடவடிக்கை எடுப்போம் மின்சார கட்டண அதிகரிப்பால் மக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

