19.5 C
Scarborough

மஹிந்த ராஜபக்‌ஷவை கொலை செய்ய உதவி – அநுர அரசின் மீது குற்றச்சாட்டு

Must read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் எழுவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்

“நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை அரசாங்கம் சடுதியாக குறைப்பதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் சாடினார்.

மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவா பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது : சட்டத்தரணி  மனோஜ் கமகே - News View

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உத்தியோகஸ்த்தர்களில் 116 பேர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை புலிகள் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த செயற்பாடு மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்காவா அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது? என்றும் அவர் கூறியுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article