கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பஸ் நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் திருடப்பட்ட சில சொத்துக்களுடன் களனி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படை மூலம் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

