ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பார்சிலோனா ஓபன் தொடரில் இருந்து இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.
லாரன்சோ முசெட்டி நேற்று நடந்த மாண்டே கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்காரசிடம் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.