பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் குனார் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஹல்ஹாமில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து சிந்து நதி நீர்ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் கடும் சிரமங்களை எதிர் கொண்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் போல ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித ஒப்பந்தமும் இல்லை என கூறப்படுகிறது.

